அயோத்தி கும்பாபிஷேகம்: சிவகாசியில் ரூ.500 கோடி பட்டாசு விற்பனை

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

இந்த விழாவை தீபமேற்றி தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், மக்கள் சிவகாசி வந்து பட்டாசு வாங்கி சென்றுள்ளனர்.

குறிப்பாக ரூ.500 கோடிக்கு பட்டாசு வியாபாரம் ஆகியுள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .

2023 நவ., ல் தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.

ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக 25 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. தீபாவளிக்கு தயாரிக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஓரளவிற்கு இருப்பு இருந்தன.

அயோத்தி கும்பாபிஷேகத்திற்காக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வந்தவர்களுக்கு பற்றாக்குறை இன்றி விற்பனை செய்ய முடிந்தது.

இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஒரே ஆண்டில் இரு தீபாவளி என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.