சமையல் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க இதோ சில வழிகள்... !

மிளகாய் தூளில் செங்கல் தூள் மற்றும் செயற்கை நிறத்தை கலப்படம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும்.

பிரகாசமான சிவப்பு நிறத்தில் ஒரு சுழல் இருந்தால், அது செயற்கை நிறம் சேர்க்கப்பட்டிருப்பதை குறிக்கிறது. வண்டலாக படியும்போது, ​​மரத்தூள் அல்லது செங்கல் தூள் இருப்பதைக் காட்டுகிறது.

கரித் தூசி, மரத்தூள், புல் விதைகள் போன்றவற்றை சீரகத்தில் கலப்படம் செய்ய வாய்ப்புள்ளது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து சில நிமிடங்கள் விட்டு விடுங்கள். தூய மசாலா கீழே படிந்துவிடும்; கலப்படம் மட்டும் மிதக்கும்.

சிறிதளவு சீரகத்தை எடுத்து, உங்கள் உள்ளங்கைகளில் தேய்க்கவும். அப்போது உள்ளங்கைகள் கருப்பாக மாறினால், அது கலப்படத்தைக் குறிக்கிறது.

ஒரு பவுலில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் சிறிது குருமிளகை போட்டால், பப்பாளி விதைகள் கலக்கப்பட்டிருந்தால் மிதக்கக்கூடும்; உண்மையான குருமிளகு அடியில் சென்றுவிடும்.

சர்க்கரை / உப்பு... ஒரு டீஸ்பூன் சர்க்கரை அல்லது உப்பை எடுத்து தண்ணீரில் 30 நிமிடங்கள் விடவும். தண்ணீரில் முழுமையாகக் கரைந்தால் கலப்படம் எதுவும் இல்லை.

அதேவேளையில் வெள்ளை நிறத்தில் ஏதாவது கரைசல் இருந்தால் சுண்ணாம்பு பவுடர் கலக்கப்பட்டதை குறிக்கும்.

கடுகை நசுக்கிப் பார்த்தால் வெளியே மென்மையாகவும், உள்ளே மஞ்சள் நிறத்திலும் இருக்கக்கூடும். அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுக்கும்போது, உட்புறம் வெள்ளையாக இருக்கும்.