இன்று இந்திய நாளேடுகள் தினம்!
இந்தியாவின் முதல் ஆங்கில மொழி செய்தித்தாள் வெளியிடப்பட்டது வரலாற்றில் இந்த நாள் (ஜனவரி 29).
ஆம் 29 ஜனவரி 1780 அன்று, இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் 'ஹிக்கிஸ் பெங்கால் கெசட்' கோல்கட்டாவில் அதன் வெளியீட்டைத் தொடங்கியது.
ஜேம்ஸ் அகஸ்டஸ்ஹிக்கி என்ற ஐரிஷ்காரரால் தொடங்கப்பட்ட வாராந்திர ஆங்கில இதழ் இதுவாகும்.
இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடுகிறோம்.
ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை. உண்மை தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது.
எளியவர்கள், கல்வியாளர்கள் என பாகுபாடு இன்றி அனைத்து பிரிவினருக்கும் தேவையான தகவல்களைக் கொண்டு சேர்க்க இது முக்கிய பங்குயாற்றுகிறது.
பெரியவர்கள் மட்டும் அல்ல மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம். அடுத்த தலைமுறைக்கும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்.