தீ விபத்தா.. உடனே என்ன செய்ய வேண்டும்...
தீ விபத்து நேர்ந்தால், உடனடியாக 101 ஐ அழைக்கவும். அடுத்தவர் செய்திருப்பார் என அலட்சியம் வேண்டாம்.
ஜன்னல், கதவு அருகே வந்து தீ அல்லது நெருப்பு என்று சத்தமாக கத்தி அனைவரையும் எச்சரிக்கவும்.
உங்கள் அப்பார்ட்மெண்ட்கோ அல்லது அலுவலகத்திற்கோ ஒரு புகை எச்சரிக்கை இருந்தால் (Smoke Alarm) அதை அழுத்தவும்.
தீ விபத்து நடக்கும் நேரத்தில் லிப்டை பயன்படுத்த வேண்டாம். படிகளை பயன்படுத்தவும்.
புகை அதிகமாக இருந்தால் உங்கள் வாயையும் மூக்கையும் ஒரு ஈரமான துணியால் மூட வேண்டும். தரையை நோக்கி இருங்கள். காற்று அங்கு தூய்மையாக இருக்கும்.
எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயலலாம். தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயற்சி செய்யக் கூடாது.
உங்கள் துணிகளில் நெருப்பு பிடித்துக்கொண்டால், ஓடாதீர்கள். அது தீயை மேலும் அதிகமாக்கும். தண்ணீர் ஊற்றலாம்.
உங்கள் கட்டடத்தின் சங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் தீ பயிற்சிகளை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.