வீட்டில் பீட்ரூட் செடி வளர்க்க இதோ ஈஸி ஸ்டெப்ஸ்

வளமான மண் நிறைந்த, சூரிய ஒளி நன்றாக படும் இடத்தை பீட்ரூட் செடிகளை வளர்க்க தேர்ந்தெடுக்க வேண்டும்.

குறைந்தப்பட்சமாக ஒரு அடிக்கு மண்ணை கிளறிவிட்டு, கற்கள் மற்றும் குப்பைகளை அகற்றி விடவும்.

வேர் வளர்ச்சிக்கு போதிய இடம் கிடைக்கும் வகையில், ஒரு அடி இடைவெளி விட்டு ஆங்காங்கே விதைகளை நடவும்.

மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் தண்ணீர் தேங்கக்கூடாது.

5 முதல் 8 நாட்களுக்குள் செடிகள் முளைக்கும். 4 - 5 இன்ச் உயரம் வளர்ந்தவுடன் வேறு இடத்தில் கூட நடலாம்.

தேவையான உரத்தை அளித்து, அவ்வப்போது செடிகளை சுற்றியுள்ள களைகளை நீக்கிவிட வேண்டும்.

நடவு செய்த 6 -8 வாரங்களுக்கு பிறகு கவனமாக அறுவடை செய்யலாம். சுற்றியுள்ள மண்ணைத் தளர்த்தி, பீட்ரூட்டை மெதுவாக வெளியே இழுக்க வேண்டும்.