இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை வாங்கி வாழ்வது அதிகமாகி விட்டது.

அப்படி அங்கு வாழும் இந்தியர்களின் உறவை அப்படியே துண்டித்து விட முடியாது; அவர்களையும் நாம் இணைக்க வேண்டும் என முடிவு செய்தார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

அதனால் அவரது பதவி காலத்தில் 2003ல் ஜனவரி 9ம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என அறிவித்தார். அதற்குபிறகு ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

காந்தி வந்த நாள்மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அந்த நாள் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்பட வேண்டும் என்று அப்போதுதீர்மானிக்கப்பட்டது.

விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி மத்திய, மாநில அரசுகளுடன் கலந்துரையாடவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இவ்விழா உதவுகிறது.

2023 ம் ஆண்டுக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது.