வயதான பெற்றோரின் பாதுகாப்புக்கு, வெளிநாட்டுவாழ் பிள்ளைகள் செய்ய வேண்டியவை....
பெற்றோர் அவசர சமயங்களில், உடனடியாக வந்து உதவி செய்யும் வகையில், உறவினர்கள், நண்பர்களிடம் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
அவசரத்திற்கு வருபவர்களின் எண்களை பெற்றோர் மொபைல் போனில் பதிந்து கொடுக்கவேண்டியது அவசியம்.
மொபைல் போன் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு, சுவற்றிலேயே அதற்கான ஓர் இடம் தேர்வு செய்து, அவசர அழைப்பு எண்கள் அனைத்தும் எழுதி வைக்கவேண்டியது அவசியம்.
வீட்டில் வெளிப்புறம், உட்புறம் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துவதுடன்; முடிந்தால் வெளிநாட்டில் இருந்து கேமராக்கள் வழியாக பேசும் வசதிகளையும் ஏற்படுத்தலாம்.
பெற்றோர் உடல் நிலை பொறுத்து, வெளிநாடு செல்லும் முன்னரே வீட்டின் அருகில், குறிப்பிட்ட மருத்துவமனை, மருத்துவர்களை தேர்வு செய்து அறிமுகம் செய்துவிடவேண்டும்.
வாரத்திற்கு இரண்டு முறையாவது, பெற்றோரிடம் வீடியோ அழைப்பு வாயிலாக, மனம் விட்டு பேசி, அவர்களின் மகிழ்ச்சி, வருத்தங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நிதிசார்ந்த நெருக்கடி இல்லாதவர்கள், பராமரிப்பு உதவியாளர்களை நியமிப்பது, வயதான காலத்தில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும்.
முடிந்தளவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பேரன், பேத்திகளுடன் வந்து, அவர்களுடன் நேரம் செலவிட வேண்டியது கட்டாயம்.