டிரென்டிங்கில் உள்ள ரெயின்போ வண்ண உடைகள்!
வேண்டாம்.. ஆகவே ஆகாது, என பலராலும் நிராகரிக்கப்படக்கூடிய, கிண்டலுக்கு உள்ளாகும் உடைகள், ஆபரணங்கள் அனைத்தும் எதிர்பாராவிதமாக பேஷன் உலகில் பிரபலமாகும்.
முன்பு கிழிந்த பேன்ட்களை அணிந்தால் ஏளனமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதோ கிழிந்த டிசாஸ்டர், டிஸ்ட்ரஸ்டு மற்றும் டோர்ன்டு ஜீன்ஸ்கள் பட்டையை கிளப்புகின்றன.
இந்த வரிசையில் தற்போது ரெயின்போ வண்ண சட்டைகள் பலரின் சாய்ஸ் ஆக மாறி வருகிறது. இதில், ஒரே சட்டையில் பலவிதமான வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ரெயின்போ நிற சட்டையை அணிந்தவாறு, விதவிதமான புகைப்படங்களை அசத்தலாக பதிவிட்டுள்ளார்.
கீர்த்தியின் இந்த புகைப்படங்கள் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
அதேப்போல், நடிகை பிரியங்கா மோகனும் இதேப்போன்ற சட்டையை அணிந்து படுஸ்டைலான புகைப்படங்களை பதிவிட்டு, கலர் கலரான ரெயின்போ வண்ண பேஷன் சட்டைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
நிறத்தைக் குறிப்பிட்டு சிவப்புக்கலரு, மஞ்சக்கலரு சட்டை எனக் கிண்டலாக அழைப்பது சாதாரணமானது. இந்த ரெயின்போ நிறச் சட்டைகளில் அப்படி கிண்டலடிப்பது சற்றே கடினமானதுதான்.