இன்று போதி தினம்

புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்ற நாளை நினைவு கூறும் வகையில், டிச., 8ல் போதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தரின் ஆன்மிக சிந்தனைகள் சில பார்ப்போம்...

கோபத்தை அன்பால் வெல்லுங்கள். பகைவரிடமும் நட்புக்கரம் நீட்டுங்கள்.

தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்.

உலகத்தை வெல்வதைக் காட்டிலும், மனிதன் தன்னை வெல்வதே மிகச் சிறந்த வெற்றி.

ஒவ்வொரு கணப் பொழுதும் இனிமையானது. அதை அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பத்திற்காக மட்டுமின்றி நம்மை ஆளாக்கிய சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக வாழுங்கள்.

பொறாமையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எப்போதும் அமைதியில் திளைப்பீர்கள்.

நல்ல வழியில் நிர்வகிக்கப்பட்ட மனம் மனிதனைச் செம்மைப்படுத்தும். அதனால் வரும் நன்மை எல்லையற்றது.