வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்யலாம்?

வாய் துர்நாற்றத்திற்கு வாய் வறட்சியும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதை 'க்சீரோஸ்டோமியா' (Xerostomia) என்று அழைப்பர்.

வாய் வறண்டு போவதால் அங்கு பாக்டீரியா உருவாக்கம் அதிகமாக இருக்கும். இதனாலும் துர்நாற்றம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாய் வறண்டு போக தொடர்ந்து பேசுதல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை காரணங்களாக உள்ளது.

அல்சர், வயிற்று புண் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்னைகள், பல்சொத்தை அல்லது ஈறுகளில் பிரச்னை அதேபோல் நாக்கை சுத்தம் செய்யாமல் விட்டாலும் இந்த பிரச்னை வரும்.

தினமும் பல், நாக்கு பராமரிப்பு அவசியம். பற்களை சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். அதனால் தினமும் இரு வேளை பல் துலக்க வேண்டும்.

உப்பு நீர் மட்டுமல்லாமல், பிளாக், கிரீன் டீ கொண்டு வாயைக் கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும்.

துளசி, புதினா இலை அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் துர்நாற்றம் வராது. ஜீரண சக்தியும் மேம்படும்.

மேலும் »

நல்ல குடல் இயக்கதிற்கு நார்ச்சத்து அதிகமுள்ள காய்கனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.