கண் மை பயன்படுத்துவதால் ஆபத்து உண்டாகுமா? தவிர்க்கும் வழிகள் இதோ...
கண்களை அலங்கரிக்க கண் மை, ஐ லைனர் மற்றும் மஸ்காரா உட்பட பல மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, கண் மை எளிதில் அழியாமல் இருக்க அதிகளவில் ரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் வீண் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
கண்ணின் வாட்டர்லைனில் மை இடுவதால், அங்குள்ள நுண்ணிய துளைகளில் அடைப்பு ஏற்படக்கூடும். கண்ணில் சுரக்கப்படும் திரவியங்கள் வெளியேற வழியின்றி நாளடைவில் கட்டி போல உருவாகக்கூடும்.
தொடர்ந்து, அலட்சியமாக இருக்கும்போது பாதிப்பு அதிகரித்து, கார்னியல் அல்சர் எனப்படும் கருவிழிப் புண், பார்வை குறைபாடு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
எனவே, அவற்றை பயன்படுத்த துவங்கும் முன்பாக 'பேட்ச் டெஸ்ட்' செய்ய வேண்டும். அதாவது உடலில் சிறு பகுதியில் பயன்படுத்தி, ஏதாவது பாதிப்பு உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
கண்களில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரசாயனங்கள் கொண்ட மேக்கப் சாதனங்களை கண்களுக்கு பயன்படுத்துவதைத் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
தேவை முடிந்தவுடன் கண் இமை, இமை முடி போன்ற அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் மேக்கப்பை முழுமையாக அகற்ற வேண்டும் .
ஒருவர் பயன்படுத்திய மேக்கப் சாதனங்களை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது. வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தப்படுத்த வேண்டும்.
கண்கள் சிவப்பாகவோ, எரிச்சலாகவோ இருந்தால் உடனடியாக டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.