அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்: நீக்க சில டிப்ஸ்!
எண்ணெய்த்தன்மை சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் அதிகம் தாக்கும். அதிலும் பிளாக்ஹெட்ஸ் என்பது சருமத்தின் இறந்த செல்கள் மற்றும் எண்ணெய் பசைகளால் ஏற்படும் கருப்பு புள்ளிகளாகும்.
மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த ப்ளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும். இந்த பிளாக்ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் 'பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ்' பயன்படுத்தினாலும் அவை முழுவதுமாக நீங்காது. வீட்டிலேயே அவற்றை நீக்கும் வழிமுறைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
சர்க்கரையை எலுமிச்சை சார்றுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். நல்ல பலன் கிடைக்கும்.
ஓட்ஸை பொடி செய்து தயிர் சேர்த்து கலந்து, மூக்கு, கன்னம் மற்றும் தாடை பகுதிகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இது சரும வறட்சியையும் போக்கும்.
நன்கு மசித்த வாழைப்பழம், ஓட்ஸ், தேன் சேர்த்து கலக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் பிளாக் ஹெட்ஸ் நீங்கும்.
இரண்டு தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பிளாக் ஹெட்ஸ் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவும். இறந்த செல்களும் நீங்கும்.