இந்த சம்மருக்கு காஷ்மீரில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள் !
பஹல்காம் பள்ளத்தாக்கு குளிர்ச்சியான புல்வெளிகள், அழகிய நீரோடைகள், அடர்ந்த பைன் காடுகள், டிரெக்கிங், குதிரை சவாரி என பஹல்காம் பள்ளத்தாக்கில் உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்.
கோடைகாலத்தில் கலர்புல்லான காட்டுப்பூக்கள் நிறைந்த புல்வெளிகளுடன் சொர்க்கமாக காட்சியளிக்கிறது குல்மார்க் புல்வெளிகள். பனிமூடிய சிகரங்கள், டிரெக்கிங், படகுச்சவாரி என உற்சாகமாக உலா வரலாம்.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் பாரம்பரிய மரப் படகுகளில் மிதந்துகொண்டே சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாகும்.
தங்கத்தின் புல்வெளி என அழைக்கப்படும் சோனமார்க், பனி மூடிய சிகரங்கள், ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் பனிப்பாறைகள் என கோடையில் வரவேற்கிறது.
ஜபர்வான் மலைத்தொடரின் பின்னணியில், பல்வேறு வண்ணங்களில் ஆயிரக்கணக்கான டூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் ஸ்ரீநகர் துலிப் தோட்டம் மாயை உலகுக்கு அழைத்துச் செல்லும்.
இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமான பீடாப் பள்ளத்தாக்கு, பசுமை, பனி படர்ந்த மலைகள் மற்றும் சலசலக்கும் நீரோடைகள் ஆகியவற்றால் சூழப்பட்டு அமைதியான சூழலை அளிக்கிறது.
பசுமையான புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பாய்ந்து செல்லும் நீரோடைகளுடன் இயற்கை அழகை வாரி வழங்குகிறது அரு பள்ளத்தாக்கு; இயமமலையின் அழகை வெகுவாக ரசிக்கலாம்.