சிறுவர்களுக்கு அடிக்கடி அதிகளவில் வியர்ப்பது நல்லதா?
குழந்தைகளுக்கு அதிகமாக வியர்வை சுரப்பது சாதாரணமானதாக இருக்கலாம்.
பொதுவாக சூடான மற்றும் ஈரமான சூழல், உடற்பயிற்சி அல்லது விளையாட்டு காரணமாக உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த அதிகமாக வியர்வை சுரக்கிறது.
இதுதவிர, மருத்துவ ரீதியாக பார்த்தால் தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்படும் போது (ஹைப்பர் தைராய்டிசம்) வியர்வை அதிகரிக்கக்கூடும்.
வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் உடல் வெப்பத்தை உயர்த்துவதால் வியர்வை அதிகமாக சுரக்கக்கூடும்.
காரமான உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
சிலருக்கு உஷ்ணநிலை கட்டுப்பாட்டில் பிரச்னை இருந்தால் அதிகமாக வியர்வை ஏற்படலாம்.
அதேவேளையில் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிக வியர்வை இருந்தால் டாக்டரிடம் காண்பிப்பது நல்லது.