தொந்தரவு தருதா தொப்பை... டி-சர்ட் அணிவதில் இருக்கு சீக்ரெட்!
டி- ஷர்ட் தரும் சவுகரியம் அலாதியானது. ஆனால், தொப்பை உள்ள ஆண்கள் டி-ஷர்ட் அணியும்போது, அது அவர்களின் வயிற்றுப் பகுதியை, இன்னும் பெரிதாக காட்டக்கூடும்.
இந்த பிரச்னையை தவிர்த்து, தொப்பை உள்ளவர்களும் எப்படி ஸ்டைலாக டி-ஷர்ட் அணியலாம் என பார்ப்போம்.
பிட் மற்றும் சைஸ் மிக முக்கியம் தொப்பை உள்ளவர்கள் செய்யும் முதல் தவறு, மிகவும் இறுக்கமான (டைட்டான) டி-ஷர்ட் அணிவதுதான்.
எப்போது டி-ஷர்ட் வாங்கினாலும், நீங்கள் வழக்கமாக அணியும் அளவை விட, ஒரு சைஸ் பெரியதாக வாங்குங்கள்.
அதேபோல், 'பாக்ஸி - பிட்' டி-ஷர்ட்களைத் தேர்வு செய்யுங்கள். இந்த வகை டி-ஷர்ட்கள் உடலோடு ஒட்டாமல், சற்று தளர்வாக இருக்கும். இதனால் உங்கள் வயிற்றுப் பகுதி தனியாக தெரியாது.
சாதாரண ரவுண்ட் நெக் டி-ஷர்ட் தவிர்த்து, 'வி' நெக் டி-ஷர்ட்களைத் தேர்ந்தெடுங்கள். 'வி' நெக், உங்கள் தோற்றத்திற்கு எடுப்பாக இருக்கும்.
அதேபோல், துணியின் மெட்டீரியல் மிகவும் முக்கியம். காட்டன் (பருத்தி) மற்றும் லெனின் மெட்டீரியலில், தேர்வு செய்யுங்கள்.
பாலிஸ்டர் மற்றும் சிந்தடிக் வகை துணிகள் உடலுடன் ஒட்டி, உங்களை மேலும் பருமனாக காட்டும் என்பதால் தவிர்க்கலாம்.
டி-ஷர்ட்டை மட்டும் சரியாகத் தேர்ந்தெடுத்தால் போதாது. பேன்ட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் தொளதொளப்பான, பேகி பிட் பேன்ட் அணிய வேண்டாம்.
அதற்கு பதிலாக, சினோஸ் அல்லது கச்சிதமாகப் பொருந்தும் டைலர் பிட் பாட்டம்களை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.