இந்த பிப்ரவரியில் விசிட் செய்ய தென்மாநிலங்களில் தேசிய பூங்காக்கள் சில !
கர்நாடகா, பந்திப்பூர் தேசிய பூங்கா.. நீலகிரி மலையடிவாரத்தில், உயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அழகை ரசித்துக் கொண்டே, புலிகள் மற்றும் ஆசிய காட்டு யானைகளை பார்க்கலாம்.
முதுமலை தேசிய பூங்கா, தமிழகம்... நீலகிரி மலையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவில் யானைகள், சிறுத்தைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளை ரசிக்கலாம்.
கர்நாடகா, நாகர்ஹோல் தேசிய பூங்கா... கர்நாடகாவுக்கும், நீலகிரி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ள இப்பூங்கா, உலகின் மிகப்பெரிய ஆசிய யானைகளின் தாயகமாக உள்ளது.
சைலண்ட் வேலி தேசிய பூங்கா, கேரளா... சிங்க வால் குரங்குகளை கண்டு ரசிக்கலாம்.
இரவிகுளம் தேசிய பூங்கா, கேரளா... மூணார் அருகே அமைந்துள்ள இப்பூங்காவில் அழிந்து வரும் நீலகிரி தஹ்ர்களுக்கு (மலை ஆடு) முக்கியத்துவம் வாய்ந்தது.
பெரியார் புலிகள் காப்பகம், கேரளா... தேக்கடியில் உள்ள இப்பூங்காவில் வனவிலங்குகள் மட்டுமின்றி மூங்கில் ராஃப்டிங், டிரெக்கிங், பார்டர் ஹைகிங் என உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்.
மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா, தமிழகம்... உலகின் வளம் மிக்க கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா முக்கியமானது. இங்கு அரிய வகை கடல் வாழ் உயிரிழங்களை ரசிக்கலாம்.