இன்று உலக ரோஜா தினம்...

அன்பின் சின்னம் மட்டுமல்ல... ஆறுதலின் அடையாளமும் ரோஜா தான்!

புற்றுநோயாளிகளுக்கு குடும்பத்தினர், நண்பர்களின் அன்பும், அரவணைப்பும் அவசிய தேவை என்பதுதான், மருத்துவர்கள் வழங்கும் முதல் 'அட்வைஸ்'.

'விரைவில் குணம் பெற்று விடுவேன்' என்ற ஆழமான நம்பிக்கை, அவர்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும் என்பதும், மருத்துவர்கள் கூற்று.

புற்றுநோயாளிகளுக்கு ஒரு ரோஜாவை அன்பளிப்பாக வழங்குவதன் வாயிலாக, அவர்கள் ஆறுதல் பெறுவர், நம்பிக்கை அடைவர்.

இதை முன்னிறுத்தி தான் ஒவ்வொரு ஆண்டும், செப்., 22ல், உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் புற்று நோயாளியின் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்' என்ற மையக்கருத்தை, ஐ.நா., சபை முன்னிறுத்தியுள்ளது.