இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!
இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்.
மும்பையில் 1942 ஆக. 8ல் 'செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மகாத்மா காந்தி துவக்கி வைத்தார்.
இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
மறுநாள் ஆக., 9ம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறை பிடித்தனர்.
இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.
லட்சக்கணக்கானோர் கைதாகினர். இனியும் இந்தியாவை ஆள முடியாது என்ற எச்சரிக்கையை இது ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தியது.
மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.