ஃபவுன்டென் பேனாக்கள் உருவான கதை..!

பால் பாயின்ட் ரீஃபிள் பேனா, ஜெல் பென் என பலவித பேனாக்களைப் பயன்படுத்தினாலும் இன்றும் நம் மனங்களில் நீங்கா இடம் பிடிக்கும் பேனா ரகம் என்றால் அது ஃபவுன்டன் பேனாக்கள்தான்.

பேனா பிடித்து எழுத நேரமின்றி ஃபவுன்டென் பேனாக்களை நாம் சில ஆண்டுகளாக மறந்திருப்போம்.

ஃபவுன்டென் பேனாக்கள் எப்போது உருவாகின எனத் தெரிந்துகொண்டால் அதன் மீதான மதிப்பு உங்கள் மனதில் மேலும் அதிகரிக்கும்.

17 ஆம் நூற்றாண்டில் துவங்கியே இங்க் எனும் மை ஊற்றி எழுதும் ஃபவுன்டென் பேனாக்கள் தோன்றிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரபல ஓவியர், தத்துவ மேதை லியனார்டோ டாவின்ஸி தனது கருத்துகளை ஃபவுன்டென் பேனா மூலம் எழுதிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் நவீன ஃபவுன்டென் பேனாக்கள் உருவாக கிட்டத்தட்ட 250 ஆண்டுகாலம் தேவைப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்..! நிப், இங்க் டேங்க், ஃபீட், செக்ஷன், பேரல், கேப் கொண்ட ஃபவுன்டென் பேனாக்கள் உலகின் பல மூலைகளில் விஞ்ஞானிகள் பலரால் தயாரிக்கப்பட்டன.