விமான பயணத்தின் லேஓவர் நேரத்தில் வேறு நாட்டுக்குள் நுழையலாமா?

நாம் பயணிக்கும் விமானம் நடுவில் வேறொரு நாட்டில் நிற்பதை லேஓவர், ஸ்டாப்ஓவர் என்பர்.

லேஓவர் என்றால் நமது லக்கேஜ்கள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, அந்த விமானத்தில் நாம் சென்றடைய வேண்டிய நாட்டிற்கு சென்று சேருவோம்.

ஸ்டாப்ஓவர் என்றால் செயல்பாட்டு காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் அதே விமானத்தில் சென்று சேர்வது.

உதாரணமாக, சென்னை - தாய்லாந்து பயணத்தில், கோலாலம்பூரில் 14 மணி நேரம் நின்று செல்லும்.

அப்போது விசா இருந்தால், இமிகிரேஷனில் அனுமதிப் பெற்று கோலாலம்பூரைச் சுற்றிப் பார்க்க முடியும்.

உள்ளே வரும்போதும் மீண்டும் இமிகிரேஷனில் ஒப்புதல் பெற, 3 மணி நேரத்துக்கு முன் திரும்ப வேண்டும்.

தற்போது இந்திய பாஸ்போர்ட் மூலம் இந்தோனேஷியா, மாலத்தீவு போன்ற 30 நாடுகளுக்கு விசா இன்றியே செல்லலாம்.

ஆனால் பல மணி நேரம் லேஓவர் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஓரிரு மணி நேரங்கள் என்றால் வெளியே செல்ல சாத்தியமில்லை.