அசத்தும் ஐ மேக் அப்… பெரிய லிஸ்டே இருக்கு!

கண்களை அழகாக மெருகூட்ட சந்தையில் பல மேக் அப் ஐட்டங்கள் கிடைக்கின்றன. ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

புருவங்களை அழகுப்படுத்த முகத்துக்கேற்றபடி முதலில் திரெட்டிங் செய்யலாம். மேலும் ஐ ப்ரோ பென்சில் கொண்டு தேவைப்படும் இடத்தில் வரையலாம்.

ஐ ஷேடோ நிறைய கலரில் கிடைக்கும். ஸ்கின் டோன், சைனி, மேட், மெட்டாலிக் என தனித்துவமாகவும் கிடைக்கின்றன.

கண்களை தனியாக எடுத்துக்காட்ட ஐ லைனர் பயன்படுத்தலாம். கண்களுக்கு மேல் இருக்கும் பகுதியில் எளிமையாக வரையலாம்.

கண்களுக்கு லென்ஸ் பல வண்ணங்களில் கிடைக்கிறது. உங்கள் மேக் அப்பிற்கு ஏற்றப்படி அணியலாம்.

கண் மைக்கு மாற்றாக காஜல் வந்திருக்கிறது. இது நீண்ட நேரம் அப்படியே இருக்கும். கலர் காஜலும் கிடைக்கிறது.

மெல்லிய கண் இமைகளை மிடுக்காக காட்டும் மஸ்காரா. மேலும் இமைகளை நீளமாக அடர்த்தியாக காட்டும்.

கண் இமைகள் சுருளாக வைக்க ஐ லாஷ் கர்லர் கிடைக்கிறது. இதை பயன்படுத்திய பிறகு மஸ்காரா பயன்படுத்தினால் கண் இமைகள் பெரிதாக இருக்கும்.