லட்சத்தீவு போகணுமா? அப்போ உங்களுக்குத்தான் இது !

இந்தியாவின் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு சமீபத்தில் பார்வையாளர்களை வெகுவாக தன்பக்கம் ஈர்த்து வருகிறது.

நீல நிறத்தில் தெளிவான தண்ணீர் மற்றும் பவளப்பாறைகள் காரணமாக தண்ணீர் சாகசத்துக்கு இந்தியாவில் புகழ்பெற்றது இந்த லட்சத்தீவு.

கேரளாவுக்கு அருகே அரபிக்கடலில் அமைந்துள்ள இந்த லட்சத்தீவை, பட்ஜெட்டில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.

இங்குள்ள மினிகாய் தீவு கடற்கரை பிரியர்களுக்கும், தண்ணீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் சிறந்த இடம்.

தண்ணீரின் நிலைத்த வெப்பநிலை காரணமாக வளமான கடல்வாழ் உயிரினங்களை இங்கு காண முடிகிறது.

நீர்வழி அல்லது வான் வழியாக மட்டுமே நீங்கள் இங்கு வர முடியும்.

அகட்டி தீவுக்கு நேரடி விமானங்கள் கிடையாது. கொச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து இங்கு செல்லலாம். விமானக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கும்.

நீர் வழி என்றால் பிரச்னை இல்லை. கொச்சியிலிருந்து பயணிகள் கப்பல்கள் பல இயக்கப்படுகின்றன. அதில் முன்பதிவு செய்துவிட்டுச் செல்லலாம்.

ஆனால், லட்சத்தீவுக்குள் நேரடியாக நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. பயணத்தைத் துவக்குவதற்கு முன்பே ஆன்லைனில் உரிய அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.