மாடி தோட்டத்திற்கு ஏற்ற புஷ் ஆரஞ்சு!!
மாடி தோட்டத்தில், புஷ் ஆரஞ்சு என அழைக்கப்படும் சிறிய ரக ஆரஞ்சு பழம் சாகுபடி செய்யலாம். இதற்கு, டேபிள் லெமன் என, மற்றொரு பெயரும் உண்டு.
ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் -சி இருக்கிறது. இதுதவிர, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்ற சத்துகளையும் கொண்டிருக்கிறது.
இந்த பழச்செடி மாடி தோட்டம் மற்றும் வீட்டை சுற்றி உள்ள நில பகுதியில் சாகுபடி செய்யலாம்.
இது, ஒட்டு ரகம் என்பதால், ஆறு மாதத்தில் காய்கள் காய்க்க துவங்கும். துவக்கத்தில் வரும் காய்களை கிள்ளி எரிந்து விட வேண்டும்.
இந்த செடிகளில், கோடை, மழை, குளிர் ஆகிய அனைத்து காலங்களில் பழங்கள் கிடைக்கும்.
இந்த புஷ் ஆரஞ்சு பழம், அதிக புளிப்பு சுவையுடன் மாறுபட்டு இருக்கும். இந்த பழங்களை ஜூஸ் போடுவதற்கு பயன்படுத்தலாம்.