உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று
உலகில் 13 - 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 3.7 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகையிலையின்
தீமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டை குறைக்க
வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.
புகை பிடிப்பவர் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.
புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
லண்டன் பல்கலையின் சமீபத்திய ஆய்வின் படி, ஒரு சிகரெட்
புகைப்பதன் மூலம் சராசரியாக 19.5 நிமிடங்கள் ஆயுட்காலம் குறைகிறது. ஒரு
பாக்கெட் புகைப்பவர் வாழ்நாளில் 7 மணி நேரத்தை இழக்கிறார்.
ஒரு
நாளில் 10 முறை சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால் ஒரு வாரத்திலுள்ள 7
நாட்களில் ஒரு முழு நாளை சேமிக்கலாம். ஒரு ஆண்டுக்கு 50 நாளை சேமிக்கலாம்.