களைகட்டும் காசி தமிழ் சங்கமம்...!
நாடு முழுதும் உள்ள ஹிந்துக்கள் காசியிலுள்ள கங்கையில் புனித நீராடி, விஸ்வநாதர் உட்பட 2,000க்கும் மேற்பட்ட கோவில்களை தரிசிப்பதை வாழ்வின் ஒரு அங்கமாக கடைப்பிடிக்கின்றனர்.
குறிப்பாக பழங்காலத்தில் இருந்தே, காசி மற்றும் தமிழகத்துக்கு இடையே, கலை, கலாசாரம், ஆன்மிக ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளது.
இந்த உறவு குறித்து இரு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ளவும், கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
உ.பி.,யில் ஒரு மாதம் நடக்கவுள்ள, 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி, இன்று (நவ.,19), வாரணாசி பனாரஸ் பல்கலை.,யில் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், காசி என்னும் புண்ணிய பூமியில் இந்த சங்கமம் நிகழ்ச்சியை நடத்த, பிரதமருக்கு எப்படி தோன்றியது என வியந்து மகிழ்வதாக இளையராஜா பேசினார்.
தமிழக மக்களின் கலாச்சாரத்தை நினைவுக் கூரும் வகையில், வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடியின் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது.
தமிழை காக்க வேண்டியது 130 கோடி இந்தியர்களின் கடமை என வேண்டுகோள் விடுத்த மோடி, 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், கரகாட்டத்தில் அசத்திய கலைஞர்கள்.