தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் தியாகராஜன் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்.

ரூ.77 ஆயிரம் கோடியில் 16,500 மெகாவாட் மின் திறன் கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும், சிறப்பு நிவாரணம் போன்ற பணிகளுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு.

தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்தில் இருந்து, ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.

விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

நிலம் வாங்குபவர்களின் பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.

கோவையில் செம்மொழிப் பூங்கா ரூ.172 கோடியில் நிறுவப்படும். தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, ஓசூர், கோவையில் டெக் சிட்டி அமைக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளில் பொதுவெளியில் இலவச வை-பை சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

மாநிலத்தில் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும். தமிழில் அதிகளவில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும். சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தப்படும்.

கைத்தறி மேம்பாட்டுக்கு ரூ.20 கோடியில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் நிறுவப்படும்.