பணக்காரர்களுக்கு 10 ஆண்டு விசா : இந்தோனேஷியா அறிமுகம்...

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா சுமார் 17 ஆயிரம் குட்டித்தீவுகளை கொண்ட நாடாகும். அங்குள்ள பாலி தீவு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோரை கவர்ந்து வருகிறது.

உலகளவில் பணக்கார சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, 5 மற்றும் 10 ஆண்டுகள் வரையில் தங்க அனுமதிக்கும் 'செகண்ட் ஹோம்' விசாக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

2 பில்லியன் ரூபியாக்களை (இந்திய மதிப்பில் ரூ.1.05 கோடி) வங்கி கணக்கில் வைத்திருப்போருக்கு 10 ஆண்டுகள் வரையில் தங்க அனுமதிக்கும் விசா வழங்கப்படுகிறது.

புதிய விதிகள் கிறிஸ்துமஸ் அல்லது அறிவிப்பு வெளியான 60வது நாளில் இருந்து அமலுக்கு வருமெனவும் தெரிவித்துள்ளது.

பாலி தீவில் வரும் நவம்பரில் நடக்கும் ஜி - 20 மாநாட்டில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பிரதிநிதிகள் வருகை தரும் நிலையில், புதிய விசா விதிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

மேலும் அங்குள்ள பாலி தீவு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும், குறிப்பிடும்படியாக அன்னிய செலாவணியை ஈட்டி தருவதில் முன்னணியில் உள்ளது.