ஆந்திரப்பிரதேசத்தின் அழகிய அரக்கு பள்ளத்தாக்கு!
போரா குகைகள் இந்தியாவின் புவியியல் ஆய்வின் வில்லியம் கிங் ஜார்ஜ் என்பவரால் 1807 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட து. இந்த அழகிய குகைகள் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குகை.
போரா குகைகளுக்கு அருகில் உள்ள கடிகி கிராமத்தில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி, ட்ரெக்கிங் செய்ய ஏற்ற ஸ்பாட்.
அரக்கு பள்ளத்தாக்கில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று காபி மியூசியம். 1930 ல், பிரகாஷ் ராவ், அரேபிகா காபியின் தனித்துவத்தை எடுத்துரைப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்காக இதனை ஆரம்பித்தார்.
இங்கு பிரமிக்க வைக்கும் இடங்களில் சப்பாறை நீர்வீழ்ச்சியும் ஒன்று. இதனை சுற்றி அனைத்து பகுதிகளும் காடுகளாக சூழப்பட்டுள்ளது. இது பள்ளத்தாக்கிலிருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் 1996 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அரக்கு பழங்குடியினர் அருங்காட்சியகம்.
26 ஏக்கர் நர்சரியில் பழத்தோட்டங்கள், வண்ணமயமான பூக்கள், அற்புதமான ரோஜா தோட்டம், கவர்ச்சியான தாவரங்கள், யூகலிப்டஸ், பைன் ஆகியவற்றை நீங்கள் இங்கே கண்டு களிக்கலாம்.