உலகின் மிக அழகான 5 நகரங்கள்... கண்கவர் புகைப்படங்களுடன்!
பயணம் தொடர்பான நிறுவனம் ஒன்று தங்களின் பிரத்யேக ஆய்வின் மூலம் உலகின் மிக அழகான 5 நகரங்களை பட்டியலிட்டுள்ளது.
பட்டியலில் முதல் இடத்தில் நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க் உள்ளது. இருபுறமும் வானளாவிய கட்டடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்புற இடங்களின் கலவையுடன் வெகுவாக ஈர்க்கிறது.
இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள ட்ரெவி நீரூற்று 1600ம் ஆண்டில் பிரபல சிற்பிகளால் அமைக்கப்பட்டது. இயற்கைக் காட்சிகள், சிலைகள் என அத்தனை தத்ரூபமாக அப்போதே அமைத்துள்ளனர்.
லாஸ் வேகாஸ் பகுதியில் அமைந்துள்ள பெல்லாஜியோ நீரூற்றுகள் 460 அடி உயரம் வரை எழும்பும். இசையுடன் தண்ணீர் நடனத்தை கண்டு மகிழ இங்கு ஏராளமான வெளிநாட்டு பயணிகள் செல்வர்..
ஸ்பெயினின் கேடலோனியா பிராந்தியத்தின் காஸ்மோபாலிட்டன் தலைநகரான பார்சிலோனா அதன் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.
மேற்கத்திய நாகரிகத்தின் சிறந்த அடையாளங்களில் ஒன்று, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள, நோட்டர் டேம் கதீட்ரல். இது 850 ஆண்டுகளாக இருந்தநிலையில், புதுப்பொழிவுடன் 2024ல் மீண்டும் திறக்கப்படுகிறது.