இன்று சமூக ஊடக தினம்
சமூக ஊடகங்களை கொண்டாடும் விதமாக இன்று உலகம் முழுவதும் சமூக ஊடக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவீன உலகில் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளை விட சமூக ஊடகங்கள் மூலம் செய்திகள் விரைவாக மக்களை சென்றடைகின்றன.
உலகின் எங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், சம்பவங்களை புகைப்படம் அல்லது வீடியோவுடன் காண சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் உடனுக்குடன் பரவுவது பெரும் பிரச்னையாக உள்ளது.
அதனால், அதில் உள்ள தகவல்களை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம். மேலும் அதை பயன்படுத்துவதில் கவனமாக இருப்பது நல்லது.
அதேவேளையில் நமது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.