தூக்கத்துக்கு வழிவகுக்கும் வாழைப்பழம்

துாக்க மாத்திரையில், 'ட்ரைட்டோடன்' என்ற ரசாயனம் உள்ளது. இதே ரசாயனம் தான் வாழைப்பழங்களிலும் உள்ளது.

துாக்கத்திற்கு முக்கியமான இன்னொன்று, தசைகளின் இறுக்கம் நீங்கி, தளர்வடைய வேண்டும். இதை செய்யும் மெக்னீசியம் சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளது.

எனவே, துாக்க மாத்திரையாக வாழைப்பழம் செயல்புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாழைப்பழத்தை சாப்பிட்ட பின், ஒரு மிளகை கடித்து, சுவைத்து மெல்ல வேண்டும். இப்படி செய்வதால், கபத்தால் வரும் தொல்லை இருக்காது.

மேலும், வெது வெதுப்பான நீரில் குளித்து, சிறிது நேரம் நடந்துவிட்டு படுத்தால், உடனே நல்ல துாக்கம் வரும்.

வாழைப்பழங்களில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினசரி உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இருப்பினும், உயர் ரத்த சர்க்கரை பிரச்னை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.