தீவின் நடுவே உலகின் அமானுஷ்ய வீடு: மிரட்சியாக பார்க்கும் மக்கள்.

தீவு ஒன்றின் நடுவில் மர்மமும் சுவாரஸ்யமும் கலந்திருக்கும் உலகின் தனிமையான வீடு உள்ளது.

ஐஸ்லாந்தின் தெற்கில் உள்ள ஒரு சிறிய தீவான எல்லிடேவில், கடலுக்கு நடுவே உள்ள பசுமையான மலையின் மடியில் சலனமின்றி இந்த ஒற்றை வீடு காட்சியளிக்கிறது.

இந்த இடத்தில் 300 வருடங்களாக ஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. இந்தக் குடும்பங்கள் 1930ம் ஆண்டுகளில் தீவை விட்டு வெளியேறியது. அதன் பிறகு இந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.

இங்கு வீடு இல்லை எனவும் போட்டோஷாப் செய்யப்பட்ட படம் எனவும் ஒரு பக்கம் இணையத்தில் பார்க்கும் மக்கள் இது பற்றி தெரிவிக்கின்றனர்.

எல்லிடே தீவில் உண்மையாக 1950 ஆம் ஆண்டுகளில் வேட்டையாடும் சங்கத்து உறுப்பினர்களுக்கு தங்கும் இடமாக இந்த வீடு கட்டப்பட்டது.

110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் பஃபின்ஸ் எனப்படும் நோர்டிக் பறவைகள் அதிகம் உள்ளது.

இது ஒரு தனியார் வேட்டைக் கிளப்பின் லாட்ஜ் என்றாலும், பார்வையாளர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த தீவிற்கு செல்வதே சவாலான ஒரு விஷயம். குளிரில் பெரிய அலைகளுக்கு நடுவே திகில் ஊட்டும் பயணமாக அது இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த வீடு 10 பேர் தங்கக்கூடிய வகையில் வீட்டிற்குள் சோபா, பெரிய மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது.