மகிழ்ச்சியாக இருக்க இதோ 7 டிரிக்ஸ்
நட்பு எல்லா வயதினருக்கும் பயனளித்தாலும், முதிர்ந்த வயதில் மகிழ்ச்சியின் முக்கிய ஆதாரமாக உள்ளதால், புதிய நட்பை உருவாக்க தயாராக இருப்பது சிறந்ததென உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
நல்ல
செய்தியை ஆர்வத்துடன் கேட்பதும், ஆதரிப்பதும் நல்ல நண்பராக இருப்பதற்கான
அடித்தளமாகும் என்பதால் அவ்வப்போது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து
கொள்ளலாம்.
நாள்பட்ட வலி மற்றும் மனச்சோர்வின் பாதிப்பை குறைக்க தன்னார்வ தொண்டு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, விலங்குகள், செடிகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டலாம்.
முதியோர்களுடன் இணைவது ஆழ்ந்த உளவியல் நன்மைகளை ஏற்படுத்துமென ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களின் போராட்டங்களும், சாதனைகளும் உங்களுக்கான வெற்றிப் பாடமாகும்.
இதுவரை கிடைத்த அதிர்ஷ்டங்கள் மற்றும் உதவிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப வெற்றிப்பாதையில் முன்னோக்கி செல்லலாம்.
அவ்வப்போது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினருடன் வாகனத்தில் நீண்ட பயணம் செல்லலாம். அப்போது, முகத்தை வருடும் காற்று, மயக்கும் இசை என மகிழ்ச்சியில் திளைத்து நம்பிக்கையை தூண்டும்.
எதிர்பாக்கும் விருப்பம் நிறைவேறாவிட்டால் மனம்
தளரக்கூடாது. வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது என்பதை ஏற்றுக்கொண்டு
திடமான அணுகுமுறையை பின்பற்றினால் மகிழ்ச்சி எப்போதும் நம் வசம்தான்.