புதுசா டிரெக்கிங் போறீங்களா? இதோ 8 ஸ்மார்ட் டிப்ஸ் !
அதிக உயரம், நீண்ட தூரம் செல்லும் போது ஆரோக்கியம் முக்கியமானது. எனவே, டிரெக்கிங் செல்லும் முன் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
செல்லுமிடம், இலக்கு, நிலப்பரப்பு, வானிலை, உள்ளூர் கலாச்சாரம், அவசர தொடர்பு எண்கள், தங்குமிடம், அங்குள்ள வசதிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
மழை அல்லது தண்ணீரிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாக்க தரமான நீர்ப்புகா பைகள், பிளாஸ்டிக் கவர்களை எடுத்துச் செல்லவும்.
மலைப்பகுதியில் சீரற்ற பாதைகளில் ஏறுவது, நடப்பது என்பதால், ஓவர் பேக்கிங் கூடாது; அவசியமான பொருட்களை மட்டும் கொண்டு சென்றால் டிரெக்கிங் எளிதாக இருக்கும்.
தண்ணீர், எனர்ஜி பார்கள், உலர் பழங்கள் அல்லது பழங்களை எடுத்துச் செல்வதன் மூலம் உங்களின் ஆற்றலை பராமரிக்கலாம்.
முதல் முறையாக டிரெக்கிங் செய்கிறீர்கள் என்றால், தனியாகச் செல்லக்கூடாது. எப்போதும் குழுவாகவோ அல்லது அனுபவசாலிகளுடனோ செல்வது பாதுகாப்பானது.
பாறை அல்லது வழுக்கும் பாதைகளில் செல்ல உதவும் வகையில் நல்ல பிடிமானமுடன் கூடிய வசதியான காலணிகளை அணியுங்கள்.
இடைவிடாமல் நடந்தால் சோர்வு உண்டாகும். அவ்வப்போது தசைகளுக்கு ஓய்வளிக்க இடைவெளி விடும்போது, சுற்றியுள்ள இயற்கை அழகை நிதானமாக ரசிக்க முடியும்.