உலக தற்கொலை தடுப்பு தினம்!

தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப். 10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி, உலகம் முழுவதும் ஆண்டுக்கு எட்டு லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இதை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரோ புரிந்துகொண்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர்.

அதை சமாளித்து போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்திந்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல் என உணர வேண்டும்.