சுவைக்கவே முடியாத சாக்லேட் மலைகள்!
பிலிப்பைன்ஸில் போஹோல் தீவில் சாக்லேட் மலைகள் அமைந்துள்ன. இது பெயருக்குகேற்ப பார்க்க இனிமையானதாக உள்ளது.
பவளப் படிவுகள் மற்றும் மழை நீர் அரிப்பின் காரணமாக மலைகளில் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.
ஒரே அளவில் மொத்தம் 1,200 முதல் 1,800 மலைகள் வரைக்கும், சுமார் 50 சதுர கி.மீ., பரப்பளவில் பரவி காணப்படுகிறது.
மலைகள் அனைத்தும் பச்சை புற்களால் அழகாக மூடப்பட்டிருந்தாலும், கோடையில் இந்த பச்சை நிறம் பழுப்பு நிறமாக மாறுவதால், பார்க்க சாக்லேட் போன்று உள்ளதால், சாக்லேட் மலைகள் என அழைக்கப்படுகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்கள் பட்டியலில் உள்ள இந்த சாக்லேட் மலைகள், நாட்டின் 3வது தேசிய புவியியல் நினைவுச்சின்னமாக உள்ளது.
இங்கு இம்பெராட்டா சிலிண்டிரிகா மற்றும் சாச்சரம் ஸ்பான்டேனியம் போன்ற புல் வகை தாவரங்கள் அதிகமுள்ளன.