மழைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க இதோ சில டிப்ஸ்!
சென்சிடிட்டிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு மழைக்காலத்தில் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
எண்ணெய் தன்மை இல்லாத இயற்கையான சோப்கள் மற்றும் முகம் கழுவும் கிரீமை பயன்படுத்தலாம்.
முகம் கழுவிய பின் சருமத்தில் மாய்ஸ்சரைசர் கிரீமை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று உண்டாவதை தவிர்க்க, தினமும் இரண்டு முறை வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது அவசியமானது.
மழைக்கால சீசனில் கிடைக்கும் பழங்களுக்கு முன்னுரிமை அளித்து சாப்பிட்டால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
சரும வறட்சியை போக்க பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை தடவி முகம் கழுவலாம்.
மழைக்காலத்தில் சோப்புக்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் சோப்பிலுள்ள ரசாயனங்களின் தன்மைகள், சருமத்தை மேலும் வறண்டு போக வைக்கும்.