ஐபிஎல் 2024 ஜெய்ப்பூரில்... பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இங்கு சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்ட மஹால் ஹவா மஹால். சவாய் பிரதாப் சிங்மஹாராஜாவால் 1799ம் ஆண்டில் கட்டப்பட்டது.
ராஜா மான் சிங், மிர்ஸா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆம்பர் கோட்டை, ராஜ்புத் கட்டுமான கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஜெய்ப்பூர் மன்னர் சவாய் ஜெய் சிங்-ஆல் ஆரவல்லி மலைமுகட்டில் 1734ல் கட்டப்பட்டது பிரம்மாண்டமான நஹர் கோட்டை. போர்காலத்தில் மன்னரை பாதுகாக்க இக்கோட்டை சிறந்த இடமாக விளங்கியுள்ளது.
ஜெய்ப்பூர் மன்னர்கள் வேட்டைக்குச் செல்லும்போது வழியில் தங்கும் வசிப்பிடமாக ஜல் மஹால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணாடிக்கூடம் என அழைக்கப்படும் ஷீஸ் மஹால் ஆம்பர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு, புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் விரும்புவர்.
ஜந்தர் மந்தர் என்ற வானியல் நோக்குக்கூடம் 2ம் ஜெய்சிங் மன்னரால் ஜெய்பூர் உட்பட 5 இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. கற்களால் உருவாக்கப்பட்ட 'டெலஸ்கோப்'-ல் வானில் நட்சத்திரங்களை ரசிக்கலாம்.
ஜெய்ப்பூர் உள்ளூர் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நாராயண பகவான் சிலை அமையப்பெற்ற அக்ஷர்தாம் கோவில், ராஜஸ்தானின் நவீன கட்டுமானத்துக்குப் பெயர் போனது.
சவாய் ராம் சிங் மன்னரால் கட்டப்பட்ட பழம்பெறும் அருங்காட்சியகம் ஆல்பெர்ட் ஹால். இங்கு பல அரிய புராதன பொருட்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.