முகத்தை ஜொலிக்க வைக்கும் முல்தானி மிட்டி பேஸ் பேக்!

முல்தானி மிட்டி என்பது மெக்னீசியம், கால்சியம் மற்றும் சிலிக்கா போன்ற தாதுக்கள் நிறைந்த ஒரு களிமண் பொருளாகும்.

பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய தோல் பராமரிப்பு நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை உறிஞ்சி விடும். ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இதனால், சருமம் ஆரோக்கியமானதாக மாறும்.

முல்தானி மிட்டியுடன் ரோஸ் வார்டர், சந்தனப்பொடி, மஞ்சள் போன்ற சில பொருட்களை சேர்ப்பதால் சருமம் குளிர்ச்சி அடையும்.

விட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தினால் சருமம் மிருதுவாக மாறும்.

நல்ல கூலிங் தன்மை கொண்ட முல்தானி மெட்டியுடன், நெல்லிக்காய் பொடி சேர்த்து பேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். முகச் சுருக்கத்தை குறைக்கும்.

வேம்பு பவுடரை சேர்த்து பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்றவை மறையும்.

இளநீர் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து பயன்படுத்தினால் முகத்துக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். கோடைக்காலத்தில் மிகவும் உதவும்.