கம்மல் தேர்வில் இருக்குது அழகு ரகசியம்!

அழகிய ஆடை அணிந்திருந்தாலும், முகத்தின் வடிவத்திற்கு பொருந்தாத கம்மல்களை அணிந்தால், அது ஒட்டுமொத்த தோற்றத்தையே பொலிவிழக்க செய்துவிடும்.

உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப கம்மல்களை தேர்வு செய்தால் மட்டுமே, அந்த அழகு முழுமையாக வெளிப்படும், என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

டிரெண்டில் 'மினிமல்' கம்மல்கள் முதல் 'ஸ்டேட்மென்ட்' ரக கம்மல்கள் வரை பல இருப்பினும், பேஷனை மட்டும் பார்க்காமல் உங்கள் முக அமைப்பை கவனிப்பது அவசியம்.

உங்கள் முகத்தின் அகலமானது, கழுத்தின் நீளத்தை விடக் குறைவாக இருந்தால், சிறிய அளவிலான கம்மல்களே (Studs) உங்களுக்கு சரியான தேர்வு.

முகத்தின் அகலத்தை விட, கழுத்தின் நீளம் அதிகமாக தெரிந்தால், நீங்கள் நீளமான 'ஹேங்கிங்' கம்மல்கள் அல்லது பெரிய அளவிலான 'ஸ்டேட்மென்ட்' கம்மல்களை தேர்வு செய்யலாம்.

இது உங்கள் தோற்றத்தை சமநிலைப்படுத்தி, தனித்துவமாகக் காட்டும். அதேபோல், கழுத்தின் நீளமும் முகத்தின் அகலமும், சமமாக இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உங்களுக்கு சிறிய ஜிமிக்கி முதல் ஜம்போ சைஸ் கம்மல்கள் வரை எது அணிந்தாலும் கச்சிதமாக பொருந்தும்.

பேஷன் என்பது அணிவது மட்டுமல்ல, அது நமக்கு பொருந்துகிறதா என்று பார்த்து அணிவதும்தான்!