தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் தியாகராஜன் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9000 கோடியும், மதுரைக்கு ரூ.8,500 கோடியும், சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விவசாயக்கடன் தள்ளுபடிக்கு ரூ. 2,393 கோடி மற்றும் நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
முதல்வர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும்.
செப்., 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக 5,145 கி.மீ சாலைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு. தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சிகளில் 1,426 கி.மீ., மண் சாலைகள், தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.