சிலிண்டர் வெடித்தால் ரூ. 50 லட்சம் இழப்பீடு? எப்படிப் பெறுவது?

சமையல் செய்யும் போது எதிர்பாராவிதமாக ஆங்காங்கே காஸ் சிலிண்டர் வெடித்து அடிக்கடி உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் காஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு காஸ் லீக்கேஜ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் நிகழ்ந்தால், உரிய நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.

இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை; இலவசமாகவே வழங்கப்படுகிறது. சிலிண்டர் வழங்கும் முன்பு டீலர் அதை முறையாக பரிசோதிக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் வீட்டில் சிலிண்டர் விபத்தால் சேதமடைந்தால் ரூ.2 லட்சம் வரை பெறலாம். விபத்து ஏற்பட்டால் ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் தனது காஸ் நிறுவனம் மற்றும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டைஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

எப்.ஐ.ஆர்., காப்பி, மருத்துவமனை ரசீதுகள் மற்றும் இறப்பு போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காஸ் நிறுவனங்களே காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தேவையானவற்றைச் செய்து கொடுக்கும்.

சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் உள்ளிட்ட அனைத்திலும் ஐ.எஸ்.ஐ முத்திரை இருந்தால் மட்டுமே இழப்பீட்டு தொகை கிடைக்கும். சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீட்டு தொகை கிடைக்கும்.