இன்று உலக விதவைகள் தினம்

பல காரணங்களால் கணவனை இழந்து தவிக்கும் விதவைகள் மறு வாழ்வுக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் உலக விதவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச விதவைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் 2011 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்டது.

உலகில் 25 கோடி பேர் விதவைகள். இதில் பத்தில் ஒருவர் வறுமையில் உள்ளார்.

அவர்களின் குரல்கள், அனுபவங்களுக்கு கவனக்கப்படவும், தேவையான தனித்துவமான ஆதரவை வலுப்படுத்தவும் இத்தினம் வலியுறுத்துகிறது

இந்த ஆண்டிற்கான சர்வதேச விதவைகள் தினத்தின் கருப்பொருள் ' அவர்களுக்கும் அதிகாரம் கொடுங்கள்: இழப்பிலிருந்து தலைமை பொறுப்பிற்கு வரும் வரை'.

உலகெங்கிலும் உள்ள விதவைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.