இன்று சர்வதேச சதுரங்க தினம்

செஸ் ஒரு பழமையான, அறிவுப்பூர்வ விளையாட்டு. சர்வதேச செஸ் கூட்டமைப்பு தொடங்கிய ஜூலை 20, உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஐநா பொதுச் சபை (UNGA) டிசம்பர் 12, 2019ல் உலக சதுரங்க தினத்தை அங்கீகரித்ததோடு, இத்தேதியை உலக சதுரங்க தினமாக தேர்ந்தெடுத்தது.

மேலும் பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது.

இந்த கூட்டமைப்பு (FIDE), 150 க்கும் மேற்பட்ட சதுரங்க கூட்டமைப்புகளை அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிபி 6 ஆம் நூற்றாண்டு வரையிலான இந்தியாவில் குப்த பேரரசின் ஆட்சியில் 4 வீரர்களை கொண்ட வியூக விளையாட்டான சதுரங்காவிலிருந்து இந்த விளையாட்டு உருவானது.

ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இரு தரப்பினரின் காய்களும், வெவ்வேறு இரண்டு நிறங்களில் அமைந்திருக்கும்

இதில் சிப்பாய்கள், பிஷப், ராஜா மற்றும் ராணி ஆகியோரின் ஒருவருக்கொருவர் எதிரான நகர்வுகளை கொண்டே வெற்றியின் இலக்கு சாத்தியமாகிறது.