உறவுகளுக்குள் ஸ்பேஸ் அவசியமானது ஏன் தெரியுமா?
உறவுகளில் இடைவெளி (ஸ்பேஸ்) என்பது மிகவும் முக்கியமானது.
கருத்து மோதல், வாக்குவாதத்திற்குப் பின் எண்ணங்களை ஒன்றிணைக்க அல்லது தனிப்பட்ட உணர்வுகளைத் தொடர, உறவில் தனித்துவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவெளி உதவுகிறது.
துணையை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. எனவே, சிக்கல்கள் இன்றி எப்படி இடைவெளி எடுத்து கொள்வது, துணையின் தேவையை மதிப்பது என பார்க்கலாம்.
ஏற்றுக்கொள்ளுதல்... உங்கள் துணை தனக்குத்தானே சமாதானமாக இடைவெளி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறிது அவகாசமளித்து அவர்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.
கேள்வி கேட்பது... அவர்கள் விரும்பும் நேரத்தையும் இடைவெளியை பற்றி நாம் தெளிவுபடுத்த வேண்டும். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் நமது எதிர்பார்ப்புகளைத் திட்டமிடலாம்.
இடைவெளியின் எண்ணம்... ஒவ்வொரு நபருக்கும், இடைவெளி குறித்த கருத்து மாறுபடலாம். எனவே, உங்களின் மற்றும் துணையின் யோசனை குறித்து விவாதிப்பது முக்கியம்.
மரியாதை... உங்கள் துணைக்கு இடைவெளி தேவை என்று நாம் அறிந்தவுடன், அவர்களின் விருப்பங்களை மதிக்க வேண்டும் மற்றும் அதற்காக தொந்தரவு செய்ய முயற்சிக்க கூடாது.
கவனித்து கொள்வது... துணை இடைவெளியை கேட்கும் நேரத்தில், நமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வதன் மூலம் நம்மை நாமே பிஸியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
தொடர்பு... உங்கள் துணைக்கு இடைவெளி கொடுக்க ஒப்பு கொண்டதற்கு பிறகு, அவருடன் எந்த விதமான தொடர்பையும் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உரையாடல்... சில நேரங்களில் உங்கள் துணை இடைவெளி கேட்டால் சமாளிப்பது கடினமாக இருக்கும். அப்போது, உரையாடல்கள் குறித்து திட்டமிட்டால் குழப்பம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.