இன்று உலக தொலைக்காட்சி தினம்!

உலகில் எந்தவொரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள், அறிவாற்றல் வளர்க்கும் விஷயங்களை வீடுகளின் வரவேற்பறைக்குள் கொண்டு வரும், தொழில்நுட்ப புரட்சியை செய்து கொண்டிருக்கிறது தொலைக்காட்சி.

இதன் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் தான் ஆண்டுதோறும், நவ. 21ம் தேதியை, 'உலக தொலைக்காட்சி தினம்' என அறிவித்திருக்கிறது, ஐ.நா., சபை.

இந்தாண்டிற்கான கருப்பொருள் 'உலகத்தோடு இணையுங்கள்' என்பதாகும்.

நிலாச்சோறு காண்பித்தும், மொட்டை மாடியில் விளையாட வைத்தும், குழந்தைகளுக்கு உணவூட்டிய, ஆரோக்கியமான வளர்ப்பு நிலை மாறி, தற்போது டிவி பார்த்து உண்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், காலை முதல் இரவு வரை பல இல்லங்களில் திகட்டும் தொல்லைக் காட்சியாக மாறிப் போயிருக்கிறது என கூறலாம்.

காலம் கடந்தாலும், தொலைக்காட்சி இன்றும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சம். டிடிஎச், ஓடிடி என பெரும் வணிகமாகவும், மாறியுள்ளது. அதனால் அதன் நன்மை தீமை உணர்ந்து செயல்பட வேண்டும்.