வெள்ளி முதல் வியாழன் வரை (10.2.2023 - 16.2.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்....
மேஷம்... தொழிலில் இருந்த தடைகள் அகலும். செலவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட நன்மை உண்டாகும். முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்... யோசித்து செயல்பட்டு லாபம் காண்பீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். செயல்களில் கவனம் தேவை. மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்... அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவை. நெருக்கடி ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.
கடகம்... நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை கூடும். நன்மைகள் அதிகரிக்கும் வாரம். திங்களூர் சந்திர பகவானை எண்ணி செயல்பட ஏற்றமுண்டாகும்.
சிம்மம்... தெளிவாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். நவகிரக வழிபாடு நலம் தரும்.
கன்னி... முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் செயல்பாடுகளால் குடும்பத்தினர் மகிழ்வர். எதிர்பார்ப்புகளில் நன்மைகள் ஏற்படும். திருமலை வேங்கடவனை மனதில் எண்ணி வழிபட திருப்பம் உண்டாகும்.
துலாம்... நண்பர்கள் உதவியால் சங்கடங்களை சமாளிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். விநாயகரை வழிபட வினைகள் விலகும்.
விருச்சிகம்... செலவுகள் அதிகரிக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றிகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும்.
தனுசு... செயல்களில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் ஏற்படும். வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். அனுமனை வழிபட நலமுண்டாகும்.
மகரம்... திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. வராகியை வணங்கி செயல்பட சங்கடம் விலகும்.
கும்பம்... செயல்களில் கவனமும், எச்சரிக்கையும் தேவைப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் பொருளாதார நிலை உயரும். நெருக்கடிகள் விலகி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நவகிரக வழிபாடு நன்மையாகும்.
மீனம்... முயற்சிகள் எளிதாக நிறைவேறும். வார்த்தைகளில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி செயல்பட மகிழ்ச்சி அதிகரிக்கும்.