மஹாராஷ்டிரா பாரம்பரிய கோட்டை சுற்றுலா... நீங்க ரெடியா!!
மஹாராஷ்டிரா மாநிலம் வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. இங்குள்ள 350க்கும் மேற்பட்ட, கம்பீரமான கோட்டைகள், பல்வேறு வரலாறுகளை எடுத்துரைக்கின்றன.
சிந்துதுர்க் கோட்டை கோட்டை சத்ரபதி சிவாஜி மகாராஜாவால், 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மராட்டிய மாநில வீரத்தின் சின்னமாகவும், மன்னருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகவும் உள்ளது
விஜயதுர்க் கோட்டை 'ஈஸ்டர்ன் ஜிப்ரால்டர்' என அழைக்கப்படுகிறது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் தனிப்பட்ட முறையில் கைப்பற்றப்பட்டது.
ஷிவ்னேரி கோட்டை சத்ரபதி சிவாஜி மகாராஜா பிறந்த இடம். அம்புக்குறி வடிவம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் தனித்துவமாக, இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது
லோஹாகாட் கோட்டை மஹாராஷ்டிராவின் பழமையான கோட்டைகளில் ஒன்று. கர்லா, பாஜா குகைகளின் அற்புதமான காட்சிகளை பார்க்கலாம். மலையேறும் சாகசப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
முருத் ஜஞ்சிரா மும்பையில் இருந்து தெற்கே 165 கி.மீ., தொலைவில் கடற்கரையோரம் அமைந்துள்ள கோட்டை. இக்கோட்டை, 16 சுற்றுகளாக அமைக்கப்பட்டுள்ளது
சிங்ககாட் கோட்டை சிங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோட்டை, கடல் மட்டத்தில் இருந்து 1,316 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது
பிரதாப்காட் கோட்டை கி.பி., 1656 - -58ல் கட்டப்பட்டது. இந்த மலைக்கோட்டையின் சுவர்கள் பிரமிக்க வைக்கின்றன
பாரம்பரிய கோட்டைகளுக்கு டூர் செல்ல விரும்புவோர் கூடுதல் விபரங்களுக்கு, www.maharashtratourism.gov.in இணையதளம், 94038 78864 என்ற மொபைல் எண், diot@maharashtratourism.gov.in தொடர்பு கொள்ளலாம்.