ஐரோப்பாவை போல உணர வைக்கும் அழகிய தென் மாநில மலைவாசஸ்தலங்கள் சில
குன்னூரிலுள்ள தேயிலை தோட்டங்கள், பாரம்பரிய குடில்கள்
மற்றும் ஊட்டி பொம்மை ரயில் ஆகியவை ஐரோப்பாவிலுள்ள ஆங்கில கிராமப்புற சூழலை
அளிக்கின்றன.
ஆங்கிலேயர்களின் கோடை விடுமுறை தலமாக இருந்த
ஊட்டி, காலனித்துவ கட்டடக்கலை, பசுமையான தோட்டங்கள், அழகிய ஏரியில்
படகுச்சவாரி ஆகியவற்றால் சுவிட்சர்லாந்து சென்ற உணர்வை அளிக்கிறது.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, பிரெஞ்சு பாணி வில்லாக்கள், காபி தோட்டங்கள் மற்றும் அமைதியான அழகால் வசீகரிக்கிறது.
அழகிய புல்வெளிகள், பைன் காடுகள், மூடுபனி நிறைந்த
பள்ளத்தாக்குகள் என அயர்லாந்தை பிரதிபலிக்கிறது கேரளாவிலுள்ள வாகமண்.
டிரெக்கிங், பாராகிளைடிங் என சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும்.
கோத்தகிரியின் காலனித்துவ வீடுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளிர்ந்த வானிலை ஆங்கில கிராமத்தை ஒத்துள்ளது.
கொடைக்கானலின் மூடுபனி நிறைந்த பள்ளத்தாக்குகள், பைன் காடுகள் மற்றும் காலனித்துவ வீடுகள் ஸ்காட்லாந்தை போல் உள்ளது.
மூணாரின் தேயிலை தோட்டங்கள், மூடுபனி நிறைந்த மலைகள், மற்றும் குளிர்ச்சியான சூழல் சுவிட்சர்லாந்து போல் உணர வைக்கிறது.