இந்தியாவில் பார்க்க வேண்டிய அழகிய இடங்கள் சில !
கர்நாடகாவில் உள்ள குடகு (கூர்க்) இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. காபி தோட்டங்களின் பசுமையான சூழல்களுக்கு மேலே மூடுபனி மேகங்கள் விரிவது கண்கொள்ளா காட்சியாகும்.
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்... இங்கு வரலாற்று சிறப்பு மிக்க ஆம்பர் கோட்டையை ரசித்தவாறு, ரொமான்டிக் டின்னர், ஷாப்பிங், ஹெரிடேஜ் ஹோட்டல் என என்ஜாய் செய்யலாம்.
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங், இந்தியாவின் மிகவும் ரொமான்டிக் இடங்களில் ஒன்றாகும். டார்ஜிலிங் ஹிமாலயன் ரயிலில் மூடுபனி மூடிய மலைகள் வழியாக இயற்கையை ரசிக்கலாம்.
பரபரப்பான சூழலில் இருந்து சிறிது விலகி ரிலாக்ஸாக... வெள்ளை மணல் கடற்கரைகளில் இயற்கையை அனுபவிக்க லட்சத்தீவுக்கு செல்லலாம்.
கேரளா போட் ஹவுஸ்... தென்னை மரங்கள் சூழ, பறவைகளின் சத்தத்தில் பேக் வாட்டரின் பிண்ணனியில், பாரம்பரிய படகு வீட்டில் பயணிப்பது புதுவையான அனுபவத்தை அளிக்கிறது.
உயரமான, அழகிய, பனி படர்ந்த மணாலி ஹிமாச்சல் பிரதேசத்தில் மெய்சிலிர்க்க வைக்கு இடமாகும். பாராகிளைடிங், டிரெக்கிங், பனிச்சறுக்கு என உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்.
லடாக்... சாகசத்தை விரும்புபவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது லடாக். உயரமான பனி படர்ந்த மலையில் ரைடிங், டிரெக்கிங் செல்வது சுவாரஸ்யமான ஒன்றாகும்.
ராஜஸ்தானின் ஜோத்பூரிலுள்ள கம்பீரமான மற்றும் பழமையான அரண்மணையில் திருமணம் செய்வது பலரின் தீராக்கனவாகும். இந்தியாவின் ரொமான்டிக்கான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முகலாய கட்டடக்கலையை பிரமாண்டமாக பிரதிபளிக்கிறது. இந்தியாவின் மிக அழகான இடங்களில் ஒன்றான இது காதல் சின்னமாக உள்ளது.
கேரளாவிலுள்ள மூணாறு ஹனிமூன் தம்பதிகளின் பேவரைட் சாய்ஸ்ஸாக உள்ளது. இங்குள்ள தேயிலை எஸ்டேட்கள் பார்வையிட்டவாறு, மேற்குத் தொடர்ச்சி மலை அழகை ரசிக்கலாம்.